Home உலகம் பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு – 9 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு – 9 பேர் பலி!

570
0
SHARE
Ad

bomb busமராமக், டிசம்பர் 10 – பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடித்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

மணிலாவின் தென்கிழக்கே உள்ள மராமக் நகரத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென குண்டு வெடித்தது. இதில் பேருந்தில் சென்ற 9 பேர் பலியானதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாவும் கூறப்படுகிறது.

பேருந்துன் பின்பகுதியில் திடீரென்று குண்டுவெடித்தது. இந்த விபத்தால் பேருந்து முழுவதும் புகை மண்டலமாக மாறியது.  இதுகுறித்து  விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.