Home கலை உலகம் இந்திய அளவில் சாதனை படைத்த ‘என்னை அறிந்தால்’ முன்னோட்டம்!

இந்திய அளவில் சாதனை படைத்த ‘என்னை அறிந்தால்’ முன்னோட்டம்!

537
0
SHARE
Ad

yennai arinthaalசென்னை, டிசம்பர் 10 – கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அனுஷ்கா நடிப்பில் உருவான படம் ‘என்னை அறிந்தால்’. படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வெகுவேகமாக  பரவி வருகிறது.

இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 77,000 விருப்புகளை (லைக்குகளை) பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முன்பு இந்திய அளவில் அதிகமாக 61,000 விருப்புகளை பெற்ற முன்னோட்டம், ஹ்ருத்திக் ரோஷனின் ‘பேங் பேங்’ பட முன்னோட்டம் மட்டுமே.

இதே போல் ‘கிக்’ 1 லட்சம் விருப்புகளை பெற்றாலும் அது அதிகாரப்பூர்வ முன்னோட்டமாக இல்லாமல் திரையரங்க முன்னோட்டமாகவே இருப்பதால் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ முதலிடத்தில் பதிவாகியுள்ளது.

#TamilSchoolmychoice