Home இந்தியா இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

710
0
SHARE
Ad

imagesலண்டன், டிசம்பர் 11 – மலேரியா நோய் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுகிறது. இதை தடுக்க அனைத்துலக நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், இந்தியாவில் மலேரியாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு 28 கோடி பேர் மலேரியா நோய் பாதிக்கும் அபாயத்தில் உள்ளனர். தற்போது 12.8 கோடி பேரை இந்த நோய் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

malaria ,ஆனால் 8.81 லட்சம் பேர் மட்டுமே இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்தியா தெரிவித்துள்ளது. இதன் மூலம் 7 சதவீதம் மலேரியா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மிகவும் சக்தி வாய்ந்த மருந்துகள் இருந்தும் இந்தியாவில் மலேரியா நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.