Home இந்தியா மோடியின் கோரிக்கையை ஏற்றது ஐ.நா – ஜூன் 21 அனைத்துலக யோகா தினமாக அறிப்பு!

மோடியின் கோரிக்கையை ஏற்றது ஐ.நா – ஜூன் 21 அனைத்துலக யோகா தினமாக அறிப்பு!

584
0
SHARE
Ad

modiஜெனிவா, டிசம்பர் 12 – ஐ.நா.சபை ஜூன் மாதம் 21-ம் தேதியை அனைத்துலக யோகா தினமாக அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா.சபை கூட்டத்தில் உரையாற்றும் பொழுது,

“யோகாவுக்கென்று ஒருநாளை அனைத்துலக தினமாக அறிவிக்க வேண்டும்” என்று தனது கோரிக்கையை முன்வைத்தார். இந்நிலையில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி, யோகாவுக்கான அனைத்துலக தினம் குறித்த தீர்மானத்தை ஐ.நா.வில் கடந்த வியாழக்கிழமை கொண்டு வந்தார்.

இந்தியா முன் வைத்த இந்த தீர்மானத்துக்கு, 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான்-கீ-மூன் கூறுகையில்,

#TamilSchoolmychoice

“நோய்கள் வராமல் தடுப்பதிலும், மனஅழுத்தம் வராமல் தடுப்பதிலும், மனத்துக்கு அமைதியைத் தருவதிலும் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கென அனைத்துலக தினம் அறிவித்தது மகிழ்ச்சியளிக்கின்றது” என்று கூறியுள்ளார்.

அனைத்துலக யோகா தினத்தை, ஐ.நா.அறிவித்ததற்கு, பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தெரிவித்துள்ளதாவது:-

“ஐ.நா.வின் அறிவிப்பால் எனக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஐ.நா.வில், இந்தியா முன் வைத்த தீர்மானத்தை ஆதரித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.