Home நாடு பிரதமர் தமது பணிகளைத் தொடர மகாதீர் அவகாசம் அளிக்க வேண்டும்: ராய்ஸ் யாத்தீம்

பிரதமர் தமது பணிகளைத் தொடர மகாதீர் அவகாசம் அளிக்க வேண்டும்: ராய்ஸ் யாத்தீம்

546
0
SHARE
Ad
dr rais yatim
ராய்ஸ் யாத்திம்

கோலாலம்பூர், டிசம்பர் 12 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தனது ஆட்சிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அனுமதிக்க வேண்டுமென சமூக மற்றும் கலாச்சாரத்துறை விவகாரங்களுக்கான அரசு ஆலோசகர் டான்ஸ்ரீ  ராய்ஸ் யாத்தீம் தெரிவித்துள்ளார்.

13ஆம் பொதுத் தேர்தலுக்கு முன்பாக ராய்ஸ் யாத்திம் நஜிப் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தார். அவர் நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ஜெலுபு நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமாவார்.

நஜிப்பைத் தொடர்ந்து பொறுப்பேற்க பலர் தயாராக இருப்பதாக மகாதீர் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறு பொறுப்பேற்கத் தயாராக இருப்பவர்கள் யார் என்பதை மகாதீர் தெரிவிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார்.

#TamilSchoolmychoice

“மகாதீர் அப்படிக் கூறியது உண்மையெனில், அவர் குறிப்பிட்ட நபர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ள நாம் காத்திருப்போம். மகாதீர் கூறிய கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில் நஜிப்பின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் உள்ளது என்பதையும் மனதிற்கொள்ள வேண்டும். அவர் செயல்படுத்த நினைக்கும் திட்டங்கள் பல உள்ளன” என்றும் ராய்ஸ் யாத்திம் குறிப்பிட்டுள்ளார்.

“மகாதீர் அறிவாற்றல் மிகுந்தவர்தான். ஆனால் எந்தவொரு அரசாங்கத்திற்கும் என சில குறைபாடுகள் இருக்கவே செய்யும். எனவே பிரதமர் நஜிப்பிற்குரிய கால அவகாசத்தை அளித்து, அவர் தனது பணிகளைத் தொடர அனுமதிக்க வேண்டும்,” என ராய்ஸ் யாத்தீம் மேலும் கூறியுள்ளார்.