Home உலகம் பிரச்சாரத்தை தொடங்கினார் ராஜபக்சே!

பிரச்சாரத்தை தொடங்கினார் ராஜபக்சே!

506
0
SHARE
Ad

President Mahinda Rajapaksa's inaugural presidential poll rally for his third termகொழும்பு, டிசம்பர் 12 – இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று முன்தினம் அதிகாலை திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். அவருக்காக திருப்பதி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

5 அடுக்கு பாதுகாப்புடன் திருப்பதியில் உலா வந்த அவர் நேற்று முன்தினம் மதியம் கொழும்பு திரும்பினார். நேற்று காலை அவர் அனுராதபுரத்தில் உள்ள புத்த மத குருவை சந்தித்தார். தேர்தலில் வெற்றி பெற அவரிடம் ராஜபக்சே ஆசி பெற்றார்.

நேற்று பிற்பகல் அனுராதபுரத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ராஜபக்சே தன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

#TamilSchoolmychoice

Sri Lanka President election nomination dayராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து இதுவரை 14 உறுப்பினர்கள் விலகியுள்ளனர்.

இதனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் தோல்வியை தவிர்க்க அவர் ரகசிய நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.