Home நாடு தான் சங்கப் பதிவக தலைமை இயக்குநர் என்ற குழப்பத்தில் செயல்படுகின்றார் பழனிவேல் – வேள்பாரி சாடல்

தான் சங்கப் பதிவக தலைமை இயக்குநர் என்ற குழப்பத்தில் செயல்படுகின்றார் பழனிவேல் – வேள்பாரி சாடல்

423
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 13 – நேற்று நாடு திரும்பிய மஇகா தேசியத் தலைவர் இன்னும் 10 நாட்களில் மத்திய செயலவையைக் கூட்டி சங்கப் பதிவதிகாரி உத்தரவு குறித்த கடிதம் பற்றி விவாதிக்கப்படும் என்று கூறியிருப்பது குறித்து மஇகா வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Vell-Paari
சா.வேள்பாரி

“தான் ஏதோ சங்கப் பதிவகத்தின் தலைமை இயக்குநர் என்ற நினைப்பிலும், குழப்பத்திலும் பழனிவேல் செயல்படுகின்றார். புகார்களை விசாரிக்க வேண்டியது சங்கப் பதிவதிகாரியின் கடமையே தவிர முறைகேடுகளையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் விசாரிக்க வேண்டியது மஇகா தலைவரின் பொறுப்பு அல்ல” என்றும் வேள்பாரி ராயாட் போஸ்ட் இணைய செய்தித் தளத்திற்கு வழங்கிய செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளார்.

நேற்று நாடு திரும்பிய பழனிவேல், தேர்தல் முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த விசாரணைகள் எதுவும் நடைபெறாது என்று தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

அதற்கு பதிலடி கொடுத்த வேள்பாரி “பழனிவேலுவின் பொறுப்பு என்னவென்றால் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து முடிப்பதுதான், மாறாக விசாரணைகளை மேற்கொள்வது அல்ல. விசாரணைகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டன என்பதையும் அதன் முடிவுதான் சங்கப் பதிவதிகாரியின் முடிவு என்பதையும் பழனிவேல் அறிவாரா?” என்றும் வேள்பாரி கேள்வி எழுப்பினார்.

வேள்பாரி கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள கெப்போங் மஇகா தொகுதியின் தலைவருமாவார்.

நேற்று நாடு திரும்பிய பழனிவேல், அடுத்த 10 நாட்களில் மத்திய செயலவை கூட்டப்படும் என்றும் சங்கப் பதிவதிகாரியின் முடிவு குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

கட்சியின் உச்சத் தலைவர்கள் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்களை அடுத்த வாரம் சந்தித்த பின்னர் இந்த மேல்முறையீடு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.