Home நாடு சபா மீன் பண்ணையாளர் விடுதலைக்காக 780,000 ரிங்கிட் பிணையப் பணம்!

சபா மீன் பண்ணையாளர் விடுதலைக்காக 780,000 ரிங்கிட் பிணையப் பணம்!

644
0
SHARE
Ad

sabahகோத்தா கினபாலு, டிசம்பர் 13 – கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்ட மீன் பண்ணையாளர் சான் சாய் சூன் விடுதலைக்காக பிலிப்பைன்ஸ் நாணயம் 10 மில்லியன் பெசோஸ் (மலேசிய ரிங்கிட் 780,000) அபு சாயாப் கும்பலுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சான் 177 நாட்கள் பிணை வைக்கப்பட்டிருந்த ஜோலோ தீவில் உள்ள வட்டாரங்கள், அந்தத் தொகை அல்-ஹாப்சி மிசாயா என்பவனின் தலைமையில் இயங்கும் அபு சாயாப்பின் துணைக் குழு ஒன்றிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் மூலம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளன.

முதலில் 30 மில்லியன் பெசோஸ் (2.34 மில்லியன் ரிங்கிட்) கேட்கப்பட்டதாகவும், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அந்தத் தொகை குறைக்கப்பட்டதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

கடத்தல் கும்பலுக்கு வழங்கப்பட்டது மட்டும்தான் 780,000 ரிங்கிட் என்றும் ஆனால் அதை விட கூடுதலான தொகை சான்னின் விடுதலைக்காக செலவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பிலிப்பைன்ஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

விடுதலைக்கான செயல் நடவடிக்கைகளுக்கான செலவினங்கள், உள்ளூர் அதிகாரிகளுக்காக கொடுக்கப்பட்ட தொகை, மற்ற இணைக் குழுக்கள், இடைத் தரகர்கள் ஆகிய செலவினங்களையும் சேர்த்தால் மேலும் கூடுதலான தொகையே சான்னின் விடுதலைக்காக செலவிடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாவிலுள்ள குனாக் மீன் பண்ணையிலிருந்து கடந்த ஜூன் 16ஆம் தேதி சான் கடத்தப்பட்டார்.

கடந்த ஜூலை 12ஆம் தேதி கடந்தப்பட்ட மற்றொரு மலேசியரான காவல்துறை அதிகாரி (கான்ஸ்டபிள்) சாக்கிய அலிப் என்பவரும் சான்னுடன் சேர்ந்து  விடுதலை செய்யப்படுவார் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் பணயப் பணம் மீதான இணக்கம் இதுவரை காணப்படாததால் சாக்கியா இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.