Home இந்தியா பிரியங்கா காந்தியின் படத்தை செல்பேசியில் பார்த்த எம்.எல்.ஏ பணி நீக்கம்!

பிரியங்கா காந்தியின் படத்தை செல்பேசியில் பார்த்த எம்.எல்.ஏ பணி நீக்கம்!

650
0
SHARE
Ad

piriyankaபெங்களூரு, டிசம்பர் 13 – சட்டசபையில் அமர்ந்து தனது செல்பேசியில் ஆபாச கோணத்தில் பிரியங்கா காந்தி படத்தை பார்த்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு சவானை பணிநீக்கம் செய்து சபாநாயகர் காக்கோடு திம்மப்பா உத்தரவிட்டார்.

இனிமேல் பேரவைக்குள் யாரும் செல்பேசி கொண்டுவரக்கூடாது என்றும் உத்தரவிட்டார். கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சட்டசபை கட்டிடத்தில் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் பேரவை கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவின் அவுராத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு சவான் தனது செல்பேசியில் உள்ள படங்களை பார்த்தபடி இருந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தியின் படமும் அந்த செல்பேசியில் இருந்தது.

#TamilSchoolmychoice

அந்த படத்தை பிரபு சவான் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பார்த்தது முகத்தை அல்ல. ஆபாசமான கோணத்தில் கழுத்தின்கீழே பாத்துக்கொண்டிருந்தார்.

சபையில் இருந்து அவை நடவடிக்கைகளை காணொளியில் பதிவு செய்த, கன்னட செய்தியாளர் இதை படம் பிடித்து ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். இதனால் பாஜகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக பிரபு சவானை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சபாநாயகருக்கு கோரிக்கைவிடுத்தது. நேற்று நாள் முழுவதும் இதே பிரச்சனையை எழுப்பி ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் எந்த பணிகளும் நடைபெறவில்லை.

இதனிடையே இன்று சட்டசபையில் மீண்டும் அதே பிரச்சனை எழுந்தது. பாஜக சட்டசபை குழு தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் யதேர்ச்சையாக அப்படத்தை பார்த்ததாக கூறினார்.

ஆனால் சமாதானத்தை ஏற்க மறுத்த சபாநாயகர் காக்கோடு திம்மப்பா, பிரபு சவானை பணிநீக்கம் செய்வதாகவும், உடனடியாக அவர் பேரவையை விட்டு வெளியேறும்படியும் உத்தரவிட்டார்.

மேலும், 2012 டிசம்பர் 7-ஆம் தேதி கர்நாடக சட்டசபை கூட்டுக் குழு அளித்த பரிந்துரைப்படி, சட்டசபைக்குள் இனிமேல் செல்பேசிகளுக்கு அனுமதி கிடையாது. எந்த உறுப்பினரும் செல்பேசியை உள்ளே கொண்டுவரக்கூடாது என்றும் சபாநாயகர் உத்தரவிட்டார்.