Home இந்தியா இந்திய தொழிலாளர்களின் ஒப்பந்தங்களை நிறுத்திவைக்க குவைத் திட்டம்!

இந்திய தொழிலாளர்களின் ஒப்பந்தங்களை நிறுத்திவைக்க குவைத் திட்டம்!

537
0
SHARE
Ad

kwnewzzzகுவைத், டிசம்பர் 13 – துபாய், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை பாதுகாக்க இந்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

அந்த திட்டப்படி வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள், குறிப்பாக வீட்டு வேலை செய்பவர்கள் பெயரில், வேலை தரும் நிறுவனங்கள், வங்கியில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்பதாகும்.

வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை மற்றும் இதர பணிகளுக்கு அதிக அளவில் இந்தியர்கள் செல்கின்றனர். இவ்வாறு அங்கு சென்று வீட்டு வேலை செய்யும் பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும், அதிக வேலைப்பளு வழங்கப்படுவதாகவும், உரிய நேரத்தில் சம்பளம் வழங்காமல் கால தாமதம் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

#TamilSchoolmychoice

அதை தொடர்ந்து அவர்களை பாதுகாக்க இந்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் பெயரில், வேலை தரும் நிறுவனங்கள், வங்கியில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

இந்த புதிய திட்டத்தினை 5 வளைகுடா நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. எனினும் இந்த புதிய திட்டத்தினை ஏற்க குவைத் அரசு மறுத்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நாட்டு மக்களை இந்த விவாகாரத்தில் கட்டாயப்படுத்த முடியாது. மேலும், இது எங்கள் நாட்டு உள் விவகாரம். இதில் இந்தியா தலையிடக் கூடாது”  என்று கூறியுள்ளது.

மேலும், குவைத்தில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் பணிக்கான ஒப்பந்தங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதன் காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.