Home கலை உலகம் உதயநிதியின் ‘நண்பேன்டா’ இசையை வெளியிடும் சூர்யா , ஆர்யா!

உதயநிதியின் ‘நண்பேன்டா’ இசையை வெளியிடும் சூர்யா , ஆர்யா!

835
0
SHARE
Ad

nanpandaசென்னை, டிசம்பர் 13 – உதயநிதி ஸ்டாலின் , நயன்தாரா, சந்தானம், நடிப்பில் புதுமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நண்பேன்டா’. படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

இப்படத்தின் படப்பிடிப்பு முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

Arya-111படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் டிசம்பர் 23-ஆம் தேதி வெளியாக உள்ளது. இசைத்தகடை சூர்யா வெளியிட ஆர்யா பெற்றுக்கொள்ள இருக்கிறார்.  படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர் ராஜெஷ் வெளியிட இருக்கிறார்.

#TamilSchoolmychoice