Home நாடு சங்கப் பதிவக முடிவு: நிஜாருடன் பொது விவாதத்திற்கு தயார் – விக்னேஸ்வரன் சவால்

சங்கப் பதிவக முடிவு: நிஜாருடன் பொது விவாதத்திற்கு தயார் – விக்னேஸ்வரன் சவால்

556
0
SHARE
Ad
S.A.Vigneswaran.
முன்னாள் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் செனட்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், டிசம்பர் 14 – மஇகாவுக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ள சங்கப் பதிவதிகாரியின் உத்தரவைக் குறைகூறியுள்ள டான்ஸ்ரீ கே.எஸ். நிஜாருடன் இந்த விவகாரம் குறித்து பொது விவாதம் நடத்த தயார் என முன்னாள் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் செனட்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.

நேற்று இணைய செய்தித் தளம் ஒன்றில், நிறைய தவறுகளைக் கொண்ட சங்கப் பதிவக முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அதனை நிராகரிக்க வேண்டுமென மத்திய செயற்குழுவிற்கு தான் சிபாரிசு செய்யப் போவதாகவும் நிஜார் கூறியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் விக்னேஸ்வரன் இந்த பொது விவாத சவாலை விடுத்துள்ளார்,

#TamilSchoolmychoice

சங்கப் பதிவக முடிவு தெளிவானது என்றும் இன்னும் தெரிவிக்கப்படாத பல விவரங்கள் சங்கப் பதிவகத்தால் வெளியிட முடியாத நிலைமை இருக்கின்றது என்றும் சுட்டிக் காட்டியுள்ள விக்னேஸ்வரன், கட்சித் தலைமை நடுநிலைமையாக நடந்து கொள்ள வேண்டுமென்றும், அறைகூவல் விடுத்துள்ளார்.

சங்கப் பதிவகம் செல்லாது என அறிவித்த கடந்த ஆண்டின் மஇகா தேர்தலில் உதவித் தலைவர் போட்டிக்கு களம் இறங்கியவர்களில் விக்னேஸ்வரனும் ஒருவராவார். அந்தத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தாலும், பின்னர் அவருக்கு எதிர்பாராதவிதமாக செனட்டர் பதவியை பழனிவேல் வழங்கினார்.

“வாக்கு தவறிய பழனிவேல்”

பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் விக்னேஸ்வரன் “இந்த விவகாரத்தில் தேசியத் தலைவர் பழனிவேலுவும் வாக்கு தவறி நடந்து கொண்டுள்ளார். முன்பு சங்கப் பதிவகம் செய்யும் எந்த முடிவையும் ஏற்றுக் கொள்வோம் என்று கூறிய அவர் தற்போது அதனை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறுகின்றார்.

இவ்வாறு மாற்றி, மாற்றிப் பேசி வாக்குத் தவறி பழனிவேல் நடந்து கொண்டுள்ளார் என்றும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.