Home இந்தியா இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டதாக கூகுள் மீது காவல் துறையிடம் புகார்!

இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டதாக கூகுள் மீது காவல் துறையிடம் புகார்!

602
0
SHARE
Ad

india googleபுதுடெல்லி, டிசம்பர் 15 – இந்திய வரைபடத்தை ‘கூகுள் மேப்’ (Google Map) தவறாக காண்பிப்பதாக கூகுள் மீது இந்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

கூகுள் மேப், இந்தியாவின் வரைபடத்தை பல்வேறு தளங்களில், தவறாக காண்பிப்பதாக இந்தியாவின் நில அளவை அமைப்பு (Survey Of India) கண்டறிந்தது.

இது தொடர்பான தகவல்களை அந்த அமைப்பு இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் இது தொடர்பான விவாதத்தை நாடாளுமன்ற அவையில் சமீபத்தில் எழுப்பினார்.

#TamilSchoolmychoice

விவாதத்தின் இறுதியில், இந்திய வரைபடத்தை பல தளங்களில் தவறாக வெளியிட்ட கூகுள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக  ராஜ்யவர்த்தன் ரத்தோர் கூறியதாவது:-

“இந்திய நில அளவை அமைப்பின் புகார் அடிப்படையில், கூகுள் மேப் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், www.google.co.in, www.ditu.google.co.ch, www.google.pk மற்றும் www.google.org ஆகிய தளங்களில் இந்திய வரைபடத்தை கூகுள் நிறுவனம் தவறாக வெளியிட்டுள்ளது”.

“இது தொழில்நுட்பச் சட்டம் 69-ஏ, 2000 கீழ் குற்றம் ஆகும். எனவே கூகுள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில்,  கூகுள் மீது இந்திய நில அளவை அமைப்பு  காவல் துறையிடம் எழுத்துபூர்வமான புகாரினை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.