Home கலை உலகம் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் பி.ஜே.சர்மா மரணம்!

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் பி.ஜே.சர்மா மரணம்!

527
0
SHARE
Ad

p.j.sharmaசென்னை, டிசம்பர் 15 – எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன், திலீப்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த பழம் பெரும் நடிகர் பி.ஜே.சர்மா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

பி.ஜே.சர்மா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் 500–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

பி.ஜே.சர்மாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள சாய்குமார் இவரது மகன் ஆவார். தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடிக்கும் ஆதி இவரது பேரன் ஆவார்.

#TamilSchoolmychoice

இரு தினங்களுக்கு முன்தான் ஆதியின் திருமணம் நடந்தது. மரணம் அடைந்த பி.ஜே.சர்மா உடலுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தெலுங்கு பட உலகினர் ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.