Home கலை உலகம் இயக்குநர் கே.பாலசந்தர் நிலைமை கவலைக்கிடம்!

இயக்குநர் கே.பாலசந்தர் நிலைமை கவலைக்கிடம்!

521
0
SHARE
Ad

சென்னை, டிசம்பர் 15 – தமிழ்த் திரையுலகத்தின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரும், பிதாமகர் என்று தமிழ்ப்பட உலகினரால் போற்றப்பட்டவருமான கே.பாலசந்தர் கவலைக்கிடமான நிலைமையில் இருக்கின்றார் என்றும் மருத்துவமனையில் அவருக்கு தீவிரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் சென்னையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

K. BALACHANDER
கே.பாலசந்தர்

ஏற்கனவே வெளிவந்த கே.பாலசந்தர் காலமானார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலில் உண்மையில்லை என்றும் அவர் இன்னும் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றார் என்றும் சென்னையிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் அவரது உடல்நிலை மேலும் மோசமாகிக்கொண்டு வருவதாகத் தெரிகின்றது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் குஷ்பு தனது டுவிட்டர் செய்தியில் பாலசந்தர் இன்னும் நலமாகத்தான் இருக்கின்றார் எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவும் மருத்துவமனையில் இருக்கும் பாலசந்தரைச் சென்று கண்டார் என மற்றொரு தகவல் தெரிவித்தது.

பாலசந்தர் சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் 84 வயதான பாலசந்தர் முதுமை நோய் காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

பாலசந்தரை மருத்துவமனையில் சென்று கண்ட நடிகர் ரஜினிகாந்தும் அவர் உடல்நலத்துடன் இருக்கின்றார் என்று கூறினார். அவர் ஒரு நல்ல ஆத்மா அவருக்காக, அனைவரும் பிரார்த்தியுங்கள் என்றும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.