Home உலகம் சிட்னி உணவகத்தை நோக்கி துப்பாக்கி சூடுகள் – சில மரணங்கள் – பிணை சம்பவம் முடிவுக்கு...

சிட்னி உணவகத்தை நோக்கி துப்பாக்கி சூடுகள் – சில மரணங்கள் – பிணை சம்பவம் முடிவுக்கு வந்தது

514
0
SHARE
Ad

சிட்னி, டிசம்பர் 15 – சிட்னி உணவகம் ஒன்றில் ஈரானிய முஸ்லீம் மத போதகர் ஒருவன் சிலரைப் பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு இன்று காலை முதல் நடத்தி வந்த சம்பவம் துப்பாக்கிச் சூடுகளோடு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

Sydney Hostage escape 1
இன்று பிணை சம்பவத்தின் உணவகத்திலிருந்து பெண்மணி ஒருவர் தப்பித்து ஓடிவந்த காட்சி

சிலர் பிணை பிடித்து வைக்கப்பட்டிருந்த சிட்னி உணவகத்தை நோக்கி இன்று காலை முதல் கண்காணித்து வந்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உணவகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

சில மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து பிணை சம்பவம் ஒரு முடிவை அடைந்திருப்பதாக ஆஸ்திரேலிய காவல் துறை அறிவித்துள்ளது.

(மேலும் செய்திகள் தொடரும்)