Home கலை உலகம் பாலசந்தருக்கு 13-ம் நாள் நினைவஞ்சலி! (தொகுப்பு-2)

பாலசந்தருக்கு 13-ம் நாள் நினைவஞ்சலி! (தொகுப்பு-2)

787
0
SHARE
Ad

சென்னை, ஜனவரி 6 –  அண்மையில் மறைந்த இயக்குநர் பாலசந்தருக்கு 13-ம் நாள் நினைவஞ்சலி கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடிகர் ரஜினிகாந்துக்குச் சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நடத்தப்பட்டது.

K Balachander 13th Day Ceremony stills (21)இயக்குநர் இமயம் பாலசந்தரின் இரு மாபெரும் கண்டுபிடிப்புகளான கமலஹாசனும், ரஜினிகாந்தும் தங்களின் குருநாதருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

பாலசந்தரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளமுடியாத சூழ்நிலைக்கு ஆளான கமல், நாடு திரும்பியதும், பாலசந்தர் இல்லத்திற்கு சென்று அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த 13ஆம் நாள் நினைவஞ்சலிக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

K Balachander 13th Day Ceremony stills (Set 2) (5)தான் இயக்குநராக அவதாரம் எடுக்க உத்வேகம் அளித்தவர் பாலசந்தர்தான் என்றும் அவர் இல்லாவிட்டால் நான் இயக்குநர் துறையைத் தேர்ந்தெடுத்து, சினிமாவுக்குள் நுழைந்திருப்பேனா என்பது சந்தேகமே என நேர்காணல் ஒன்றில் கூறியிருந்த இயக்குநர் மணிரத்னம் பாலச்சந்தர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றார்.

K Balachander 13th Day Ceremony stills (Set 2) (24)
பாலசந்தரின் பூவிலங்கு படத்தில் அறிமுகமாகி, இன்று தொலைக்காட்சித் தொடர்களின் வெற்றிக் கொடி நாட்டிவரும் நடிகை குயிலி….

K Balachander 13th Day Ceremony stills (Set 2) (3)இயக்குநர் பாலசந்தரின் மற்றொரு கண்டுபிடிப்பு நகைச்சுவை நடிகர் விவேக் தனது குருநாதருக்கு மலரஞ்சலி செலுத்துகின்றார். பாலசந்தரின் “மனதில் உறுதி வேண்டும்” படத்தின் மூலம் அறிமுகமான விவேக், அதே பாலசந்தரின் “புதுப் புது அர்த்தங்கள்” படத்தில் “இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால்” என வசனம் பேசி புகழின் உச்சிக்கு சென்றார். அடுத்த பத்தாண்டுகளுக்கு தமிழ்ப் படங்களில் நகைச்சுவை சாம்ராஜ்யம் நிகழ்த்தினார்.

K Balachander 13th Day Ceremony stills (Set 2) (20)
பாலசந்தரின் தொலைக்காட்சித் தொடர்களின் வழி புகழ்பெற்ற நடிகை ரேணுகா
K Balachander 13th Day Ceremony stills (Set 2) (18)
திரைப்பட விமர்சகர், நடிகர் யூகிசேது
K Balachander 13th Day Ceremony stills (Set 2) (7)
பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ‘ஏழு ஸ்வரங்களில்’ மற்றும் ‘கேள்வியின் நாயகனே’ போன்ற அற்புதமான பாடல்களைப் பாடி புகழ் பெற்ற பாடகி வாணி ஜெயராம்….
K Balachander 13th Day Ceremony stills (Set 2) (10)
பாலசந்தரின் சொல்லத்தான் நினைக்கிறேன், அக்னி சாட்சி, சிந்து பைரவி படங்களில் நடித்த நடிகர் சிவகுமார்….