சென்னை, ஜனவரி 6 – மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு 13-ஆம் நாள் நினைவஞ்சலி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி சென்னை ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கே.பாலச்சந்தரின் 13-ஆம் நாள் நினைவஞ்சலி கூட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகுமார், ராஜேஷ், விவேக், தாமு, லாரன்ஸ், யூகி சேது, நடிகைகள் ஜெயசித்ரா, வாணி ஜெயராம், ஸ்ரீப்ரியா, மானு ஆகியோருடன் சினிமா நட்சத்திரங்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

மேலும், குயிலி, லலிதா குமாரி, சுபா வெங்கட், தயாரிப்பாளர்கள் தாணு, பி.எல்.தேனப்பன், எடிட்டர் மோகன், இயக்குனர்கள் மணிரத்னம், சரண், விக்ரமன், வி.சேகர், சுரேஷ் கிருஷ்ணா, ஆர்.கே.செல்வமணி, ஏ.எல்.விஜய் மற்றும் பெப்சி சிவா,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா, கவிஞர்கள் மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பாலச்சந்தரின் உருவப்படத்துக்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பாலசந்தரின் இறுதிச் சடங்கிற்கு வர முடியாமல் அமெரிக்காவில் சிக்கிக் கொண்ட கமல், இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நினைவஞ்சலி நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்கும் ரஜினிகாந்த், கமலஹாசன்..


இயக்குநர் பாலச்சந்தருக்கு 13-ம் நாள் நினைவஞ்சலி
