Home நிகழ்வுகள் சித்தியவானில் இரட்டை நூல் வெளியீட்டு விழா

சித்தியவானில் இரட்டை நூல் வெளியீட்டு விழா

728
0
SHARE
Ad

booksசித்தியவான், பிப்.27- எழுத்தாளர் ஏ.பி. மருதழகன் எழுதிய ‘மருதாணிகள்’ சிறுகதை தொகுப்பும் ‘கண்ணன் வருவான் கதை சொல்லுவான்’ பக்தி இலக்கியத் தொகுப்பும்  3.3.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சித்தியவான் லிடோ மண்டபத்தில் ம.இ.கா லுமுட் தொகுதி தலைவர் வி. இளங்கோ தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகையாளர்களாக லுமுட் நாடாளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சருமான டத்தோஸ்ரீ கோங் சோ ஹா, டத்தோ எஸ். வீரசிங்கம், மலேசிய மக்கள் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன், மஞ்சோங் மாவட்ட கவுன்சிலர்கள் டத்தோஸ்ரீ கே.எஸ். பாலகிருஷ்ணன், டேவிட் முனியாண்டி, ம.இ.கா புருவாஸ் தொகுதி தலைவர் வி.சிவசாமி ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.

எழுத்தாளர்கள், வாசகர்கள், தமிழ் நெஞ்சர்கள் அனைவரையும் நிகழ்வுக்குத் தவறாது வருகை தந்து சிறப்பிக்குமாறு  ஏற்பாட்டுக் குழு சார்பில் ம.விஸ்வநாதன், எம்.வி. முனுசாமி கேட்டுக் கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice