Home இந்தியா நிலக்கரி சுரங்க முறைகேடு: மன்மோகன் சிங்கை விசாரிக்க உத்தரவு!

நிலக்கரி சுரங்க முறைகேடு: மன்மோகன் சிங்கை விசாரிக்க உத்தரவு!

566
0
SHARE
Ad

manmohanபுதுடெல்லி, டிசம்பர் 16 – நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்யவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைகேட்டில் டாட்டா பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனம் ஈடுபட்டது குறித்த வழக்கை முடித்துக்கொள்ள சிபிஐ வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மேலும், சுரங்க முறைகேட்டில் முன்னாள் நிலக்கரித் துறைச் செயலர் பி.சி. பரேக் தொடர்பு குறித்து விசாரணை நடத்தவும் சிபிஐக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நிலச்சரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, அப்போது நிலச்சரி சுரங்கத் துறை அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த விசாரணையின் போது கேள்வி எழுப்பிருந்த நிலையில், இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.