மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும், தேவைகளையும் நிறைவேற்றும் தாய்க்கட்சியான மஇகா எந்த காரணம் கொண்டும், இந்தியர்களின் பிரதிநிதியாக வேறு ஒரு கட்சியை கூட்டணியில் இணைக்க வழி விடாது என்று சுப்ரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அண்மையில் நடைபெற்ற ஜசிஎப் கட்சி மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் டத்தோ சம்பந்தன் மஇகா கட்சியை சாடியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்ட சுப்ரா, அரசியல் ஆதாயத்திற்காக மஇகா-வை பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொள்ளவது தவறான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
மஇகா கட்சியில் நிகழ்ந்த சில பிரிவுகளால் ஜசிஎப் கட்சி உருவாகியிருந்தாலும், அதற்கு மஇகா எத்தனையோ உதவிகளை செய்துள்ளது. அதை அக்கட்சித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.