டெல்லி, டிசம்பர் 17 – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, 132 பள்ளி குழைந்தைகளை கொன்று குவித்த தலிபான் தீவிரவாதிகளின் கொடூர செயலுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, இந்திய தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்திய துணை நிற்கும் என்று கூறியுள்ள அவர்,
மனிதாவிமானம் மற்றும் கொடூரமான இந்த தாக்குதலை ஒரு போதும் சகித்துகொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்தியாவில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் இரண்டு நிமிட மவுன அஞ்சலி கடைபிடிக்குமாறு மோடி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தொடரும் என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் இருந்து தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை தாக்குதலை நிறுத்தபோவதில்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.