போர்ட் லுாயிஸ், டிசம்பர் 17 – மொரீஷியஸ் பிரதமராக, அனிருத் ஜகநாத் அண்மையில் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மொரீஷியஸ் நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் அதிபர் அனிரூத் ஜகநாத் (84) தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி, 4-ல் 3 பங்கு இடங்களை கைப்பற்றியது.
இக்கூட்டணி, மொத்தமுள்ள 62 நாடாளுமன்ற தொகுதிகளில், 47 இடங்களில் வெற்றி பெற்றது.ஆளும் கூட்டணியில், பிரதமராக பதவி வகித்த ராம்கூலம், தன் தொகுதியில் தோல்வியடைந்து, 23 ஆண்டு காலமாக வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.
ஆளும் கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, பிரதமர் ராம்கூலம், தம் ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கைலாஷ் புரியாகியிடம் அளித்தார்.
அதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, புதிய பிரதமராக அனிருத் ஜகநாத்தை நியமிப்பதாக அறிவித்து உள்ளார். ராம்கூலம், ஜகநாத் ஆகிய இருவரும், 1982-ம் ஆண்டு முதல் பிரதமர், ஜனாதிபதி என, மாறி மாறி இரு பதவிகளை வகித்து வந்துள்ளனர்.
ஜகநாத், 2003 முதல் 2012 வரை, மொரீஷியஸ் அதிபராகவும் பதவி வகித்துள்ளார்.