Home வாழ் நலம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் கத்திரிக்காய்!

ரத்த அழுத்தத்தை குறைக்கும் கத்திரிக்காய்!

1085
0
SHARE
Ad

brinjal-டிசம்பர் 17 – சாம்பார், பொரியல், மசியல் என்று பல உணவு வகைகளில் கத்தரிக்காய் தவறாமல் இடம் பெற்றிருக்கும். உணவாகப் பயன்படும் கத்திரிக்காயின் மருத்துவ குணங்களை மிக விரிவாக நம் முன்னோர்களும் சொல்லியுள்ளனர்.

கத்திரிக்காய், உடல் வலியைப் போக்கும் தன்மையுடையது. காய்ச்சலைப் போக்கக் கூடியது. சோர்வைப் போக்கக் கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. கொழுப்பைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது.

brinjals-modifiedமத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவல்லது. மயக்க நிலையைத் தடுக்க வல்லது. 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது.

#TamilSchoolmychoice

கத்தரிக்காயின் தோலில் உள்ள ” ஆன்த்தோ சயனின்” என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடியது. அது மட்டுமின்றி அந்த வேதிப்பொருள் புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்க வல்லது.

கத்திரி இலைகள் ஆஸ்த்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக் கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன் தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது.

brinjal,கத்தரிச் செடியின் வேர் மூச்சிறைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது.  வேரின் சாறு காது வலியைப் போக்கப் பயன்படுகிறது. நோய் பத்திய உணவில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்னதமான மருந்தாகும்.  கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. மேலும் இதயத்துக்கு பலத்தைத் தருவதாக அமைகிறது.