பாக்தாத், டிசம்பர் 19 – ஈராக்கில் தங்கள் இயக்கத்தினரை திருமணம் செய்ய மறுத்த 150 பெண்களை, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக ஈராக்கின் மனித உரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர், தங்கள் இயக்கத்தில் உள்ளவர்களை புனித திருமணம் (ஜிகாத் எல்-நிக்காஹ்) செய்ய வேண்டும் என்று பெண்களை கட்டாயப்படுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இதற்கு ஒப்புக்கொள்ளாத 150 பெண்களை அந்த அமைப்பினர் கொடூரமாக கொலை செய்துள்ளதாக ஈராக்கின் மனித உரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த கொடூரச் சம்பவம் மேற்கு ஈராக் மாகாணத்தில் உள்ள அல்-அன்பர் பகுதியில் நடந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இது குறித்த அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மேற்கு ஈராக்கில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் கர்ப்பிணிகளைக் கூட விட்டு வைக்கவில்லை”.
“கொலை செய்யப்பட்ட அனைவரையும் அவர்கள் ஒரே இடத்தில் புதைத்துள்ளனர். மேலும் பெற்றோர் ஆதரவின்றி தவிக்க்கும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.