Home இந்தியா சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

473
0
SHARE
Ad

soniya ganthiபுதுடெல்லி, டிசம்பர் 19 – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று திடீரென  உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் மூச்சு விடுவதற்கு  சிரமப்பட்டார்.

இதையடுத்து, அவர் உடனடியாக சர் கங்கா ராம்  பல்நோக்கு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய்மக்கான் கூறுகையில், ”சோனியா காந்திக்கு சுவாசக் குழாய் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது”.

#TamilSchoolmychoice

“இதையடுத்து, அவர் டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.