வாஷிங்டன், டிசம்பர் 18 – பெஷாவர் ராணுவப் பள்ளி மீதான தாக்குதலைத் தொடர்ந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானுக்கு மேலும் உதவிகள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி அளித்துள்ளார்.
பெஷாவரில் 132 பள்ளி மாணவர்களை கொன்ற தலிபான்களின் வெறித் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், “இந்த ஒழுக்கச்சீர்கேடான செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானுக்கு அமெரிக்க உதவும்”.
“பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம். தீவிரவாதத்தை எதிர்த்து போராடி அங்கு அமைதியை உருவாக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா துணை நிற்கும்” என்று வலியுறுத்தி கூறியுள்ளார் ஒபாமா.
ஏற்கனவே, பாதுகாப்பு உதவிக்காக கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 18 பில்லியன் டாலரை வழங்கி வருகிறது.
அதேபோல், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளையும் அமெரிக்கா அழித்து வருகிறது.
இருந்த போதிலும் இந்த தாக்குதலின் போது பொதுமக்களும் பலியாவதால் பொதுமக்களின் கோபத்திற்குள்ளாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்தான் பாகிஸ்தான் மீது தாலிபான் தீவிரவாதிகள் தங்களது கோபத்தைக் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.