Home இந்தியா விடுதலைப்புலிகளின் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான் – குஷ்பு

விடுதலைப்புலிகளின் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான் – குஷ்பு

603
0
SHARE
Ad

kushboo1சென்னை, டிசம்பர் 18 – விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்று கூறியுள்ளார் குஷ்பு.  இதற்காக அவர் வீட்டை முற்றுகையிடப்போவதாக தமிழர் முன்னேற்றப்படை அறிவித்துள்ளது.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு, அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான் என்றும், காங்கிரஸ் அதற்கு எதிரான கட்சி தான் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால், குஷ்புவிற்கு எதிராக தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பினர் களம் இறங்கியுள்ளனர். நடிகை குஷ்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று கூறியதை கண்டிக்கும் விதமாக,

#TamilSchoolmychoice

நாளை வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு பட்டிணபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லீத் கேஸ்டல் சாலையில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை தமிழர் முன்னேற்றப் படையினர் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.