Home நாடு “சிறு குழுதான் நான் பதவி விலக வேண்டும் என்கிறார்கள்”- பழனிவேல்

“சிறு குழுதான் நான் பதவி விலக வேண்டும் என்கிறார்கள்”- பழனிவேல்

519
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 19 – மஇகாவில் உள்ள ஒரு சிறு குழுவினர் மட்டுமே தாம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவதாக டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறுதேர்தல் விவகாரம் குறித்து விரைவில் தானும் துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் சங்கப் பதிவதிகாரியை சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறினார்.

zul_palanivel_c57783_11622_307_v06

“துணைத்தலைவர் எஸ்.சுப்ரமணியமும் நானும் சங்கப் பதிவதிகாரியின் மறுதேர்தல் உத்தரவு குறித்து அவரிடம் சில விளக்கங்களை அடுத்த வாரம் பெறவுள்ளோம். இதையடுத்து உள்துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளோம். கட்சி அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி முன்செல்ல வேண்டும். கட்சியின் பதிவு ரத்தாவதை நாங்கள் விரும்பவில்லை. அதுவே தற்போது முக்கியம்,” என்றார் பழனிவேல்.

#TamilSchoolmychoice

இன்று நடைபெற்றது மத்திய செயலவைக் கூட்டம் அல்ல என்று குறிப்பிட்ட அவர், இது மறுதேர்தல் குறித்த சங்கப் பதிவதிகாரியின் உத்தரவு குறித்து விவாதிக்க மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற செயற்குழுக் கூட்டம் என்றார்.

“நான் பதவி விலக வேண்டும் என்று ஒருசிலர் மட்டுமே கூறுகின்றனர். அது குறித்து சொல்ல ஒன்றும் இல்லை. இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து மேற்கொண்டு ஏதும் தெரிவிக்க இயலாது. அது கட்சி ரகசியம்,” என்றார் பழனிவேல்.