Home இந்தியா பிபிசி தமிழ்ச் சேவையை டெல்லிக்கு மாற்றக்கூடாது – வைகோ

பிபிசி தமிழ்ச் சேவையை டெல்லிக்கு மாற்றக்கூடாது – வைகோ

443
0
SHARE
Ad

vaikoசென்னை, டிசம்பர் 19 – லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் பிபிசி தமிழ்ச் சேவையைத் டெல்லிக்கு மாற்றக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்;-

“பிபிசி தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் நேயர்கள் உள்ளனர். புலம்பெயர்ந்த தமிழர்களுக்குப் பொதுவான தகவல் தளமாகவும் உள்ளது. இந்த நிலையில், டெல்லிக்கு ஒலிபரப்பு மாற்றப்பட்டால் இந்தி மொழியின் ஆதிக்கம் மேலோங்கும்”.

“இந்திய – இலங்கை நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகள் அதிகம் ஒலிபரப்பப்படும். எனவே, லண்டன் தலைமையகத்தில் இருந்தே பிபிசி தமிழ்ச் சேவையைத் தொடர வேண்டும்” என்றார் வைகோ.

#TamilSchoolmychoice