Home இந்தியா பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா!

பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா!

594
0
SHARE
Ad

புதுடெல்லி, டிசம்பர் 19 – இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 112 மில்லியனைத் தாண்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக அளவில் 1.35 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள பேஸ்புக்கின் பயன்பாடு நாளுக்குநாள் பெருகி வருகின்றது. 864 மில்லியன் பயனர்கள் நாள்தோறும் பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகின்றனர்.

Facebook (1)

#TamilSchoolmychoice

 

இந்நிலையில், பேஸ்புக்கின் பயன்பாடு அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவிலும் அதிகரித்து வருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இணையத்தின் பயன்பாடு கடந்த சில வருடங்களாக உச்சத்தை நோக்கி பயணித்து வருவதற்கு மிக முக்கியக் காரணம் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெருகி வரும் தொழில்நுட்ப மோகமாகும். அதன் காரணமாக இந்தியாவிலும் பேஸ்புக்கை அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பேஸ்புக் இந்தியப் பிரிவின் மேலாண்மை நிறுவனர் கிருத்திக ரெட்டி கூறுகையில், “இந்தியாவில் பேஸ்புக் கடந்த சில வருடங்களில் அசுர வளர்ச்சி யைப் பெற்று வருகின்றது. மேலும், பேஸ்புக்கிற்கான வர்த்தக வாய்ப்புகள், விளம்பரங்கள் மூலமாக அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இந்தியாவில் மொத்தம் 112 மில்லியன் பயனர்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களில் சுமார் 52 மில்லியன் பேர் நாள்தோறும் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் இந்தியா, பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது.”

“தொழில்நுட்ப வளர்ச்சியும் இந்தியாவில் அதிகரித்து வருவதால் இந்த எண்ணிக்கை சாத்தியமாகி உள்ளது. இங்குள்ள உள்ள மொத்த பயனர்களில் 90 சதவீதம் பேர் திறன்பேசிகள் மூலமாகவே பேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், பேஸ்புக்கின் வளர்ச்சியையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி விளம்பரதாரர்களும் அதிக இலாபம் அடைவதாக  அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.