Home நாடு ஜனவரி 1 முதல் ரோன்95 பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் குறையலாம்

ஜனவரி 1 முதல் ரோன்95 பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் குறையலாம்

493
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 20 – உலக அளவில் எண்ணெய் விலை தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல்,  ஒரு  லிட்டர் ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல்,  2 ரிங்கிட்டுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ahmad maslan
அகமட் மஸ்லான்

இது தொடர்பாக துணை நிதி அமைச்சர் அஹ்மட் மஸ்லான் கூறுகையில், “எண்ணெய்களுக்கான சில்லறை விலை தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. எனினும், அடுத்த 10 நாட்களுக்கு எண்ணெய் விலையில் தொடர் சரிவு ஏற்பட்டால், ஜனவரி 1-ம் தேதி முதல், ஒரு லிட்டர் ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல்  2 ரிங்கிட்டுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

தற்சமயம் ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டர் ஒன்றிற்கு முறையே 2.26 மற்றும் 2.23 ரிங்கிட் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

#TamilSchoolmychoice

எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டால், தங்கள் தயாரிப்புகளின் விலைகளையும் குறைக்க தயாராக இருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.