Home தொழில் நுட்பம் தொழிலாளர்கள் நலனில் ஆப்பிளுக்கு அக்கறை இல்லை – பிபிசி புலானாய்வுக் குழு அதிரடி! (காணொளியுடன்)

தொழிலாளர்கள் நலனில் ஆப்பிளுக்கு அக்கறை இல்லை – பிபிசி புலானாய்வுக் குழு அதிரடி! (காணொளியுடன்)

546
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 21 – ஆப்பிள் தங்கள் நிறுவனத்தின் வர்த்தகத்தை பெருக்குவதில் காட்டும் ஆர்வத்தை, தங்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலனில் காட்டுவதில்லை என பிபிசி நிறுவனம் தனது பனோரமா நிகழ்ச்சியின் மூலம் ஆப்பிள் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

பிபிசி நிறுவனம் தனது பனோரமா தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம், பல்வேறு விவகாரங்களை புலனாய்வு செய்து ஆவணப் படங்களாக ஒளிபரப்பி வருகின்றது.

apple-logo1

#TamilSchoolmychoice

பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் நிகழும் பிரச்சனைகளை தங்களது பத்திரிக்கையாளர்கள் மூலமாக இரகசியமாகப் படம் பிடித்து வெளியிட்டு வருவதால், அந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பிபிசியின் பனோரமா குழு, ஐபோன்கள் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கும் சீனாவின் பெகட்ரோன் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள் நலன் குறித்து புலன் விசாரணையில் இறங்கியது.

ரிச்சர்ட் பில்டன் என்ற பத்திரிக்கையாளர், அந்த தொழிற்சாலையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து அங்கு தங்கி இரகசியமாக ஆராய்ந்து வந்த நிலையில், அவர் படம் பிடித்த ஆவணப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒளிபரப்பட்டது.

அதில், பெகட்ரோன் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகி வருவது படம் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு பணியாளர்களின் நேரம், பணியிடங்கள், அடையாள அட்டைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் நடைமுறையில் உள்ள அனைத்து சட்டங்களும் மீறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சோர்வு காரணமாக பல ஊழியர்கள் தொழிற்சாலைகளிலேயே படுத்துறங்கி உள்ளது கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தொடருக்காக அங்கு பணி செய்த பனோரமா பத்திரிக்கையாளர், ஒரு நாள் விடுப்பிற்காக தான் தொடர்ச்சியாக 18 நாட்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறியுள்ளார். நிகழ்ச்சியின் இறுதியாக இந்த குற்றச்சாட்டுகளை ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளதாக பனோரமா குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தொழிலாளர்கள் அக்கறை குறித்த விவகாரங்களில் அனைத்து உற்பத்தியாளர்களும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவர் என்றும், ஆப்பிள் நிறுவனத்திற்கு உள்ள புகழ் மற்றும் வர்த்தகம் காரணமாக, அந்நிறுவனம் பெரிதாக விமர்சிக்கப்படுவதாகவும் பொது நோக்கர்கள் இந்த விவகாரம் குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

படம் பிடிக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலை குறித்த காணொளியை கீழே காண்க:

https://www.youtube.com/watch?v=ZjLJEhNIGuI