Home கலை உலகம் பாலச்சந்தருக்கு நினைவு திரும்பியது: குடும்பத்தினர், சினிமா வட்டாரம் மகிழ்ச்சி

பாலச்சந்தருக்கு நினைவு திரும்பியது: குடும்பத்தினர், சினிமா வட்டாரம் மகிழ்ச்சி

495
0
SHARE
Ad

சென்னை, டிசம்பர் 21 – உடல்நலமின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு நினைவு திரும்பியதாகவும், அவரது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் தென்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

k-balachander

கடந்த வாரம் திடீர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாலச்சந்தர். அவருக்கு சுவாசப் பிரச்சினை இருப்பதாகவும், செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் சிறுநீரக பாதிப்பும் இருப்பதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் பரவவே திரையுலகமே அவரைக் காண மருத்துவமனையில் திரண்டது.

#TamilSchoolmychoice

இதையடுத்து அவருக்கு டயாலிசிஸ் எனப்படும் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த இரு தினங்களாக அவர் சுயநினைவு இன்றி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பாலச்சந்தருக்கு நினைவு திரும்பியதாக அவரது நீண்ட நாள் உதவியாளர் மோகன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“பாலச்சந்தரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. தற்போது அவருக்கு நினைவு முற்றிலும் திரும்பியுள்ளது. இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,” என்றார் மோகன்.