Home கலை உலகம் பாஜகவில் இணைகிறார் இசையமைப்பாளர் கங்கை அமரன்!

பாஜகவில் இணைகிறார் இசையமைப்பாளர் கங்கை அமரன்!

599
0
SHARE
Ad

gangai-amaranசென்னை, டிசம்பர் 20 – இளையராஜாவின் சகோதரரும் திரை இசையமைப்பாளருமான கங்கை அமரன் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாகத் தெரிகிறது.

சென்னையில் இன்று (சனிக்கிழமை) பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், கங்கை அமரன் பாஜகவில் இணையவிருப்பதாகத் தெரிகிறது.

முன்னதாக, இன்று காலை தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தேசியப் பொதுச் செயலர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை அவர் சந்தித்தார். இதனால், அவர் பாஜகவில் இணையப்போவது உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

#TamilSchoolmychoice