Home Featured தமிழ் நாடு ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளராக கங்கை அமரன்!

ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளராக கங்கை அமரன்!

925
0
SHARE
Ad

gangai-amaranசென்னை – எதிர்வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் குறித்த செய்திகளால், நாளுக்கு நாள் பரபரப்பும், விறுவிறுப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜகவும் போட்டியிடுவது, தேர்தல் களத்தின் சுவாரசியத்தை மேலும் கூட்டியுள்ளது. அதிலும், பிரபல இசையமைப்பாளர்-பாடலாசிரியர் கங்கை அமரன் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுவார் என்ற இன்றைய அறிவிப்பு, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், சசிகலா குடும்பத்தினர் தனது சிறுதாவூர் நிலத்தை வலுக்கட்டாயமாக குறைந்த விலைக்கு அபகரித்துக் கொண்டனர் என கங்கை அமரன் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், இந்தத் தொகுதியின் வேட்பாளராக அதிமுக சார்பில் சசிகலா குடும்பத்தின் டிடிவி.தினகரன் போட்டியிடவுள்ள நிலையில் அவரை எதிர்த்து கங்கை அமரன் போட்டியில் குதிக்கிறார்.

#TamilSchoolmychoice

இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் புதல்வர்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி இருவரும் சினிமாவில் பிரபலமாக உள்ளனர். வெங்கட்பிரபு முன்னணி இயக்குநராக உருவெடுத்திருக்கும் நிலையில், பிரேம்ஜி நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார்.