Home கலை உலகம் அமீர்கானின் பி.கே. படம் முன்று நாளில் ரூ. 92 கோடி வசூல் சாதனை!

அமீர்கானின் பி.கே. படம் முன்று நாளில் ரூ. 92 கோடி வசூல் சாதனை!

817
0
SHARE
Ad

Aamir Khan and Anushka Sharma in PK Movie Postersபுதுடெல்லி, டிசம்பர் 22 – அமீர்கான், அனுஷ்கா சர்மா இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் படம் பி.கே. இந்தப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியான மூன்றே நாட்களில் பாலிவுட்டில் ‘பி.கே.’ 92.50  கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது.

இந்தி திரைப்படத்தின் பொருளாதாரத்தைப் பற்றி தெரிந்த கிறிஸ் ஜோஹர் தனது டுவிட்டரில் ‘‘பி.கே. படம் மூன்று நாட்களில் 92.50  கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த வருடத்தில் இந்த சாதனையை படைத்த  4-வது படம் இதுவாகும்.

இதற்கு முன் ஹேப்பி நியூ இயர், சிங்கம் ரிட்டன்ஸ், கிக் ஆகிய மூன்று படங்கள் இந்த சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் 26 கோடி ரூபாயாக இருந்த வசூல் மூன்றாவது நாளில் 92 கோடி ரூபாயாக அதிகரித்தது’’ என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அமீர்கான், அனுஷ்கா சர்மாவுடன் சுஷாந்த் சிங் ராஜ்பூட், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜ்குமார் ஹிரானி இயக்க விது வினோத் சோப்ரா தயாரித்துள்ளார்.