Home வணிகம்/தொழில் நுட்பம் மாஸ் விளம்பரத் தூதுவராக ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நியமனம்!

மாஸ் விளம்பரத் தூதுவராக ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நியமனம்!

586
0
SHARE
Ad

nickkyr-M

கோலாலம்பூர், டிசம்பர் 23 – தனது தொடர் வீழ்ச்சியிருந்து மீள மாஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் காரணமாகத் தான் தலைமை நிர்வாகி உட்பட பல அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றது.

இந்நிலையில், மாஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரத் தூதுவராக ஆஸ்திரேலியாவின் தேசிய டென்னிஸ் விளையாட்டு வீரரான நிக் கிர்கியாஸ் (வயது 19) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து கிர்கியாஸ் கூறுகையில், “நான் ஆஸ்திரேலியாவில் வளர்ந்தாலும், எனது குடும்ப கலாசாரத்தை எண்ணி பெருமையடைகின்றேன். மேலும் நான் எனது மலேசியக் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமான உறவில் இருக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

“எனது சிறு வயது முதல், நானும் எனது அம்மாவும் மலேசியாவிலுள்ள எங்கள் உறவுகளைக் காண மலேசியா ஏர்லைன்சில் தான் செல்வோம்.” என்றும் கிர்கியாஸ் தெரிவித்துள்ளார்.

கிர்கியாசின் தாய் ஒரு மலேசியர் ஆவார். ரஃபேல் நாடல், ரிச்சர்டு கேஸ்கட் போன்ற ஜாம்பவான்களை இந்த வருடம் விம்பிள்டன் விளையாட்டுப் போட்டியில் நிலைகுலையச் செய்த பின், அனைத்துலக பூப்பந்து விளையாட்டு தரத்தில் கிர்கியாஸ் 183 வது இடத்தில் இருந்து 52 வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.