Home இந்தியா சட்டசபை தேர்தல்: ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட்டில் பாஜக முன்னிலை!

சட்டசபை தேர்தல்: ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட்டில் பாஜக முன்னிலை!

602
0
SHARE
Ad

evm-storyராஞ்சி, டிசம்பர் 23 – ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் பாஜக மற்ற கட்சிகளை விட கூடுதலாக பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரு மாநிலங்களுக்கும் ஐந்து கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

#TamilSchoolmychoice

அதேசமயம், ஜம்மு காஷ்மீரில், மக்கள் ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைப் பெறும் என்றும் அங்கு யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

ஜார்க்கண்ட் சட்டசபையில் 81 இடங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் 87 தொகுதிகள் உள்ளன. தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெளிவுபடுத்தியுள்ளார்.election-counting1-600தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், யாருடனும் பேசவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

தீவிரவாதிகளின் மிரட்டல், எச்சரிக்கை, தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஜம்மு காஷ்மீரில் நான்கு முனைப் போட்டி நிலவியது. மக்கள் ஜனநாயகக் கூட்டணி, தேசியமாநாடு, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக – அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கூட்டணிக்கு 47 இடங்கள் கிடைக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலம் உருவாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதில் இதுவரை 9 அரசுகள் அமைந்துள்ளன. 3 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாநிலத்தில் 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2009 தேர்தலில் இங்கு 56.9 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.