Home அவசியம் படிக்க வேண்டியவை கே.பாலசந்தருக்கு தமிழகப் பிரபலங்கள் அஞ்சலி (படக் காட்சிகள்-தொகுப்பு 2)

கே.பாலசந்தருக்கு தமிழகப் பிரபலங்கள் அஞ்சலி (படக் காட்சிகள்-தொகுப்பு 2)

557
0
SHARE
Ad

சென்னை, டிசம்பர் 24 – நேற்று மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் நல்லுடலுக்கு தமிழகப் பிரபலங்களும், தமிழ்த் திரையுலகப் பிரபலங்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

Homage to KB - Jayachitra

பாலசந்தரின் “சொல்லத்தான் நினைக்கிறேன்” படத்தின் மூலம் அட்டகாச அறிமுகம் கண்டு, பின்னர் “புதுப்புது அர்த்தங்கள்” படத்தில்    காக்கிநாடா காஞ்சனா என்ற கதாபாத்திரம் வரை கலக்கிய நடிகை ஜெயசித்ராவின் அஞ்சலி.

#TamilSchoolmychoice

Homage to KB - YG Mahendranநாடகப் பின்னணி கொண்ட மற்றொரு நடிகரும் கலைஞருமான ஒய்.ஜி.பி. மகேந்திரனின் கண்ணீர் அஞ்சலி.

Homage to KB Radhika

தொலைக்காட்சித் தொடர்களை அறிமுகப்படுத்தியதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து வெற்றிக் கொடி நாட்டிய கே.பாலசந்தரின் வழியில் கடந்த பத்தாண்டுகளாக தொலைக்காட்சித் தொடர் ராணியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் ராதிகா சரத்குமாரின் சோக அஞ்சலி.

KB Homage Seran & Amir

புதிய தலைமுறை இயக்குநர்கள் அமீர், சேரன் ஆகியோர் பாலசந்தருக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்தபோது…

Homage to KB Kalainyarமுன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி மகள் கனிமொழியுடன்……

Vijay paying homage to KBநடிகர் விஜய் கே.பாலசந்தருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தபோது….

KB Last rites Prakash Rao

அலங்கார வண்டியில் கே.பாலசந்தரின் நல்லுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது. அலங்கார வண்டியில் அவரது நல்லுடலோடு நடிகர் பிரகாஷ் ராஜ். அவரும் பாலசந்தரின் கண்டுபிடிப்புதான்!