Home இந்தியா இன்று கே.பாலசந்தரின் இறுதி ஊர்வலம் நடந்தேறியது

இன்று கே.பாலசந்தரின் இறுதி ஊர்வலம் நடந்தேறியது

611
0
SHARE
Ad

KB last rites procession 2சென்னை, டிசம்பர் 24 – நேற்று மறைந்த இயக்குநர் பாலசந்தரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை தமிழக நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு துவங்கியது.

பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தி்ல், பாலசந்தரின் உடல் வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்த, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

Rajni in KB procession
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்த ரஜினிகாந்த்

 

#TamilSchoolmychoice

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வழிநெடுகிலும் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

தலைவர்கள், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், சினிமா துறை சம்பந்தப்பட்டவர்கள் என பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

KB Last rites procession

பாலசந்தரின் இறுதி ஊர்வலத்திற்காக போக்குவரத்து மாற்றங்கள்  செய்யப்பட்டிருந்ததோடு, காவல் துறையினரின் பலத்த பாதுகாவல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழ்த் திரையுலகின் பிதாமகராகப் போற்றப்படும் பாலசந்தரின் மறைவினால் இன்று சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.