Home உலகம் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில்!

முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில்!

947
0
SHARE
Ad

George H.W.Bushஹூஸ்டன், டிசம்பர் 24 – முன்னாள் அமெரிக்க அதிபர் ஜியோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ் (வயது 90) அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக் குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் அமெரிக்காவின் 41வது அதிபர் ஆவார்.

இவரது மகன் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷூம் அமெரிக்க அதிபராக இரண்டு தவணைகள் பதவி வகித்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

மூச்சுத் திணறல் காரணமாக புஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அவசர சிகிச்சை (ஆம்புலன்ஸ்) வாகனம் ஒன்றின் துணையோடு புஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தனது 90வது பிறந்த நாளின்போது, விமானத்திலிருந்து வான்குடை வழியாக மற்றொரு வான்குடை வீரரின் துணையோடு விமானத்தில் இருந்து குதித்து, வான்குடை வழியாக குதித்த அதிக வயதான நபர் என்ற உலக சாதனையை புஷ் நிகழ்த்தினார்.