Home உலகம் அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபர் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபர் சுட்டுக் கொலை!

558
0
SHARE
Ad

St Louis Missouri USAசெயின்ட் லூயிஸ், டிசம்பர் 26 – அமெரிக்காவின், செயின்ட் லூயிஸ் புறநகர் அருகே கருப்பின வாலிபர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கருப்பின வாலிபர்கள், காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் மீண்டும் இனக் கலவரங்கள் ஏற்படுவதற்கான சாயல் தோன்றுவதாக பல்வேறு பத்திரிக்கைகள் குற்றம்சாட்டியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்காவின் மிசோரி மாகாணம், செயின்ட் லூயிஸ் புறநகர் அருகே செயல்பட்டு வரும் எரிவாயு நிலையத்தில், 18 வயது நிரம்பிய கருப்பின வாலிபரான அன்டோனியோ மார்ட்டின் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

#TamilSchoolmychoice

இது குறித்து செயின்ட் லூயிஸ் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “அங்குள்ள எரிவாயு நிலையத்தில், அன்டோனியோ மார்ட்டினையும் மற்றொரு வாலிபரையும் சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு சென்றார்.”

“அப்போது மார்ட்டின் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காவல்துறை அதிகாரியை நோக்கி காண்பித்து மிரட்டியுள்ளார். இதனால் தன்னை தற்காத்துக் கொள்ள அந்த அதிகாரி வாலிபரை சுட்டுக்கொன்றார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த புலன் விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் மைக்கேல் பிரவுன் என்ற கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் இந்த எரிவாயு மையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.