Home நாடு ஹுடூட் சட்டம்: பக்காத்தானில் இருந்து வெளியேறுவோம் – கிட் சியாங் எச்சரிக்கை!

ஹுடூட் சட்டம்: பக்காத்தானில் இருந்து வெளியேறுவோம் – கிட் சியாங் எச்சரிக்கை!

1085
0
SHARE
Ad

Lim Kit Siangபெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 26 – கிளந்தானில் ஹுடூட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பாஸ் தொடர்ந்து வலியுறுத்தினால் பக்காத்தான் எனப்படும் மக்கள் கூட்டணியை புறக்கணிக்க வேண்டியிருக்கும் என ஐசெக தலைவர் லிம் கிட் சியாங் (படம்) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹுடூட் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பாஸ் கட்சியின் மத்திய செயலவையே அறிந்திருக்கவில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

“ஹுடூட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பில் கிளந்தான் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படுமாயின் பக்காத்தான் கூட்டணியில் தொடர்வதில் அர்த்தமில்லை” என்று லிம் கிட் சியாங் தனது இணையதள பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஹுடூட் சட்டத்தை அமல்படுத்துவது பக்காத்தான் கூட்டணியின் பொதுக்கொள்கை அல்ல என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கூறியுள்ளதை ஆமோதித்துள்ள அவர், இது குறித்து பக்காத்தான் கூட்டணியின் தலைமைத்துவ கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே கிளந்தான் மாநிலத்தில் நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாக சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக வெளியான தகவலை அம்மாநில மந்திரி பெசார் டத்தோ அகமட் யாகோப் மறுத்துள்ளார்.

வெள்ள நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், திட்டமிட்டபடி சிறப்புக்கூட்டத் தொடர் வரும் 29ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.