Home நாடு ‘சூப்பர் ஸ்டார் 2014’ -மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது!

‘சூப்பர் ஸ்டார் 2014’ -மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது!

640
0
SHARE
Ad
10599511_1037583059600547_1596939222639285245_n
மறைந்த இயக்குநர் பாலச்சந்தருக்கு மரியாதை செலுத்தும் நடனம்

கோலாலம்பூர், டிசம்பர் 27 – விண்மீன் எச்டி “சூப்பர் ஸ்டார் 2014”-ன் மாபெரும் இறுதிச்சுற்று தலைநகர் புக்கிட் ஜாலில் அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகின்றது.

வெள்ளித்திரை அணியும், விண்மீன் அணியும் போட்டியிடும் இந்த இறுதிச்சுற்றிற்கு நீதிபதிகளாக நடிகர், இயக்குநர் டி.ராஜேந்தர், பாடகி வசுந்தரா தாஸ், பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் பாடகி எல் ஆர். ஈஸ்வரியும் கலந்து கொண்டுள்ளார்.

அறிவிப்பாளர்களாக மலேசியாவின் பிரபல நடிகர் டெனிஸ் குமார், நடிகை யாமினி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர்.

10341570_1037571219601731_2637258800582313934_n
அறிவிப்பாளர்கள் டெனிஸ், யாமினி படங்கள்: அஸ்ட்ரோ உலகம்
#TamilSchoolmychoice

முதல் சுற்றில் வெள்ளித்திரை அணி பாடி முடித்து நடுவர்களின் நல்ல கருத்துக்களை பெற்றுள்ளனர். தற்போது விண்மீன் அணி பாட்டுப் பாடி தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

போட்டியின் ஊடே ஆடல் பாடல் அங்கங்களும் இடம் பெற்று வருகின்றன. மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ரிதமிக்ஸ் குழுவினர் நடனம் ஆடினர்.

தொடர்ந்து பல சிறப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ள இந்த போட்டியை அஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசை 231-ல் நேரலையாகக் கண்டு களிக்கலாம்.