Home அவசியம் படிக்க வேண்டியவை அஸ்ட்ரோ வானவில் சூப்பர் ஸ்டார் 2014 – படக் காட்சிகள் (தொகுப்பு 1)

அஸ்ட்ரோ வானவில் சூப்பர் ஸ்டார் 2014 – படக் காட்சிகள் (தொகுப்பு 1)

811
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 28 – நேற்று இரவு தலைநகர் புக்கிட் ஜாலில் புத்ரா உள் அரங்கில் நடைபெற்ற அஸ்ட்ரோ வானவில் சூப்பர் ஸ்டார் 2014 – பாடல் திறன் போட்டியில் விண்மீன் குழுவினர் வெற்றி வாகை சூடினர்.

அந்த நிகழ்வில் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-

Denis Kumar and Yamini Astro Vanavil Super Star 2014
டேனிஸ் குமார், யாமினி

இந்த முறை வானவில் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை திறமையான அறிவிப்பாளர்களைக் கொண்ட ஒரு குழுவே சிறப்பாக நிகழ்ச்சியைப் படைத்தது. டேனிஸ் குமார் பிரதான அறிவிப்பாளராகப் பணியாற்ற அவருடன் இணைந்து சிவகாமி, மகேன்,பென் ஜி, திரேசா, யாமினி  என பல அஸ்ட்ரோ முன்னணி அறிவிப்பாளர்கள் தங்களின் பங்கை திறம்பட வழங்கினர்.

#TamilSchoolmychoice

மேலே படத்தில் அறிவிப்பாளர்கள் டேனிஸ் குமார், யாமினி…

T.Rajender
டி,ராஜேந்தர்

நேற்றைய இறுதிக் கட்டப் போட்டியில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி தனது அடுக்கு மொழிக் கருத்துகளால் நிகழ்ச்சியைக் கலகலப்பாகி, நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இலட்சக்கணக்கான இரசிகர்களையும் மகிழ்வித்த பன்முகத் திறமையாளர் டி.ராஜேந்தர்…

நள்ளிரவு 12 மணிக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னரும், அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் உற்சாகமாகக் கலந்து கொண்ட ராஜேந்தரும் அவரது மற்ற நீதிபதிகள் குழுவினரும் பின்னிரவு 1.00 மணி வரை பொறுமையாக இருந்து, பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அதே வேளையில் வெற்றி பெற்ற குழுவினருடனும்,  பத்திரிக்கையாளர்கள், இரசிகர்களுடனும், அந்தப் பின்னிரவு வேளையிலும், இன்முகத்தோடு உரையாடி, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர் நீதிபதிகள் குழுவினர்…

Vasunthara Dass & L.R.Eswari
வசுந்தரா தாஸ் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி…

கடந்த ஆறு வாரங்களாக வானவில் சூப்பர் ஸ்டார்  நிகழ்ச்சியை தலைமை நீதிபதியாக இருந்து திறம்பட வழிநடத்தி, பாடகர்களை தனது ஊசிமுனைக் கருத்துகளால், செதுக்கிய எல்.ஆர்.ஈஸ்வரியும், நேற்று இறுதிக் கட்டப் போட்டியில் நீதிபதியாகப் பணியாற்றிய பிரபல பாடகி-நடிகை வசுந்தரா தாசும்…

இதுவரை அஸ்ட்ரோ நடத்திய பாடல் திறன் போட்டிகளில் முதல் கட்டப் போட்டிகளில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் இறுதிக் கட்டப் போட்டிக்கு அழைக்கப்பட்டது இல்லை.  ஆனால், இந்த முறை இரசிர்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக எல்.ஆர்.ஈஸ்வரி இறுதிக்கட்டப் போட்டிக்கு அழைக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டார்.

???????????????????????????????

விருதுகள் பல குவித்த “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற தனது பாடலுடன் மேடையில் தோன்றி, நீதிபதிகளில் ஒருவராகப் பணியாற்றிய ஸ்ரீராம் பார்த்தசாரதி..

???????????????????????????????

வானவில் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி முடிந்த பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஸ்ட்ரோவின் டாக்டர் ராஜாமணி, முருகப்பன், நீதிபதிகள் வசுந்தரா தாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, டி.ராஜேந்தர்…

???????????????????????????????

அஸ்ட்ரோ குழுவினருடன் நீதிபதிகள் குழுவினர்…..

???????????????????????????????

வெற்றி பெற்ற விண்மீன் குழுவினர் தங்களின் பரிசுகளுடன்….

???????????????????????????????

வெற்றி பெற்ற விண்மீன் குழுவினர், நீதிபதிகள் குழுவினர் மற்றும் அஸ்ட்ரோ குழுவினருடன்….