Home உலகம் ஏர் ஆசியா விமான பாகங்கள் கண்டெடுப்பா? இந்தோனேசியா திட்டவட்ட மறுப்பு

ஏர் ஆசியா விமான பாகங்கள் கண்டெடுப்பா? இந்தோனேசியா திட்டவட்ட மறுப்பு

517
0
SHARE
Ad

ஜாகர்த்தா, டிசம்பர் 29 – காணாமல் போன ஏர் ஆசியா விமானங்களின் பாகங்கள் இன்னும் கண்டெடுக்கப்படவில்லை என இந்தோனேசிய துணை அதிபர் ஜுசுப் கல்லா தெரிவித்துள்ளார். நங்கா தீவு அருகே கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் அல்ல என்றார் அவர்.

Indonesian Vice President Jusuf Kalla (2-L) and AirAsia CEO Tony Fernandes (R) talk to relatives of the missing AirAsia plane passenger at Juanda Airport, in Surabaya, Indonesia, 29 December 2014. Others are not identified. AirAsia flight QZ 8501, en route from Surabaya to Singapore, was reported missing by Indonesian air authorities on 28 December an hour after take off. Searchers resumed on 29 December, searching land and sea for the AirAsia plane missing in Indonesia with 162 people on board. AirAsia said 155 of the people on board were Indonesians. The others included three from South Korea, and one each from Singapore, Malaysia, France and Britain.
இன்று பயணிகளின் உறவினர்களுடன் உரையாடிய இந்தேனேசிய துணையதிபர் ஜூசுப் கல்லா (இடமிருந்து இரண்டாவது) மற்றும் டோனி பெர்னாண்டஸ்..

மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்தோனேசியாவுடன் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இணைந்துள்ளன. தற்போது 13 கப்பல்கள் மற்றும் 15 விமானங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் ஜாவா கடற்பகுதியில், நங்கா என்ற தீவின் அருகே விமானப் பாகங்கள் காணப்படுவதாக மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழு தெரிவித்தது. ஆனால் அவை காணாமல் போன விமானத்தின் பாகங்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என துணை அதிபர் ஜுசுப் கல்லா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேறு எதையும் தற்போது சொல்வதற்கில்லை,” என்று செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

AirAsia CEO Tony Fernandes (L) speaks to relatives of the missing AirAsia plane passengers, at Juanda Airport, in Surabaya, Indonesia, 29 December 2014. Others are not identified. AirAsia flight QZ 8501, en route from Surabaya to Singapore, was reported missing by Indonesian air authorities on 28 December an hour after take off. Searchers resumed on 29 December, searching land and sea for the AirAsia plane missing in Indonesia with 162 people on board. AirAsia said 155 of the people on board were Indonesians. The others included three from South Korea, and one each from Singapore, Malaysia, France and Britain.
ஜூவாண்டா விமான நிலையத்தின் அவசர முகாம் அறையில் பயணிகளின் உறவினர்களுடன் உரையாடும் டோனி பெர்னாண்டஸ்

அப்போது உடனிருந்த ஏர் ஆசியா தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ், தற்போதைய சூழலில் விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பதை அனுமானிக்க இயவில்லை என்றார்.

“விமானத்தைக் கண்டுபிடிக்கும் வரை எத்தகைய முடிவுக்கும் வர விரும்பவில்லை. என்ன தவறு நேர்ந்தது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். அதன் பிறகு தேவைப்பட்டால் எங்களை மேம்படுத்திக் கொள்வோம். ஆனால் யூகங்கள் தொடர்பாக எதுவும் சொல்ல விரும்பவில்லை,” என்றார் டோனி பெர்னாண்டஸ்.

 AirAsia CEO Tony Fernandes (R)  talks to relatives of missing AirAsia plane passenger at the Juanda Airport, in Surabaya, Indonesia, 29 December 2014. AirAsia flight QZ 8501, en route from Surabaya to Singapore, was reported missing by Indonesian air authorities on 28 December an hour after take off. Searchers resumed on 29 December, searching land and sea for the AirAsia plane missing in Indonesia with 162 people on board. AirAsia said 155 of the people on board were Indonesians. The others included three from South Korea, and one each from Singapore, Malaysia, France and Britain.காணாமல் போன ஏர் ஆசியா விமானத்தில் இருந்த பயணிகளின் உறவினர்களுடன் கலந்து உரையாடும் டோனி பெர்னாண்டஸ்…

படங்கள்: EPA