Home இந்தியா ஜெயலலிதா வழக்கு: அரசு வழக்கறிஞரை மாற்ற திமுக விண்ணப்பம்!

ஜெயலலிதா வழக்கு: அரசு வழக்கறிஞரை மாற்ற திமுக விண்ணப்பம்!

495
0
SHARE
Ad

Anbazhagan_Thmni_1550460fபெங்களூரு, டிசம்பர் 30 – முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞரை மாற்ற வேண்டுமென திமுக வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் (படம்) கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அம்மாநில தலைமைச் செயலாளரிடமும் இது தொடர்பான கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்ட பவானி சிங், குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பலமுறை நடந்து கொண்டுள்ளதாக தமது மனுவில் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் பவானி சிங் ஆளாகி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய காரணங்களுக்காக தற்போது ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராக பவானி சிங்கை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.