Home இந்தியா சல்மான் கான் ஒரு துரோகி – வைகோ பாய்ச்சல்!

சல்மான் கான் ஒரு துரோகி – வைகோ பாய்ச்சல்!

635
0
SHARE
Ad

Salman-Khanசென்னை, டிசம்பர் 30 – பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஒரு நம்பிக்கை துரோகி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார் சல்மான்கான்.

இதுகுறித்து வைகோ கருத்து தெரிவிக்கையில், “சல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி என்றார் காட்டமாக. இலங்கையைச் சேர்ந்தவரும், பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து ராஜபக்சேவுக்காக வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்து அனைவரையும் அதிர வைத்துள்ளார் சல்மான் கான்.

3-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவுக்காக சல்மான் கான் பிரச்சாரம் செய்தது தமிழகத்திலும் அதிர்ச்சி அலைகளைப் பரவவைத்துள்ளது.

#TamilSchoolmychoice

இனப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக சல்மான் கான் பிரச்சாரம் செய்ததற்கு, வைகோ அவரை நம்பிக்கைத் துரோகி என்று கடுமையாக சாடியுள்ளார்.