Home கலை உலகம் மீண்டும் ’சுப்ரமணியபுரம்’ குழுவின் புதிய படம்!

மீண்டும் ’சுப்ரமணியபுரம்’ குழுவின் புதிய படம்!

791
0
SHARE
Ad

supiramaniyapuramசென்னை, டிசம்பர் 31 – புது சினிமா அதிலும் 1980-களில் என தமிழ் சினிமாவிற்கு புது முகம் கொடுத்த பெருமை ‘சுப்ரமணியபுரம்’ படத்தை சேரும் . இந்த படத்தின் வழிகளில் வந்தவைதான் ’வாகை சூடவா’, ‘முண்டாசுப்பட்டி’ போன்ற படங்கள்.

இப்போது மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி புதிய படமொன்றை உருவாக்க உள்ளனர். சசிகுமார், ஜெய், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் வசந்த மணி இயக்க உள்ளார்.

வசந்த மணி ‘ஜில்லா’ இயக்குநர் நேசனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். இந்த படமும் ஒரு 1980-களின் பாணியிலான கதைதானாம். படத்தின் மற்ற நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுவருவதாக சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice